செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மும்பையை 04 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது டெல்லி அணி

மும்பையை 04 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது டெல்லி அணி

0 minutes read

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46ஆவது போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரென்ட் போல்ட், ஐயன்ட் யாதவ், க்ருணல் பாண்ட்யா, பும்ரா மற்றும் நதன் குல்டர்நைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.