செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

1 minutes read

அய்ச்சி – நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் T47 வகைப் பிரிவு பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி ஜனனி தனஞ்சனா  விக்ரமசிங்க நான்காம் இடத்தைப் பெற்றார்.

கடும் போட்டி நிலவிய அப் போட்டியை 12.60 செக்கன்களில் நிறைவுசெய்து அவர் நான்காம் இடத்தைப் பெற்றார்.

இதற்கு முன்னோடியாக புதன்கிழமை (21) நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் ஓட்டப் போட்டியை 12.61 செக்கன்களில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

இந்தத் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் மற்றொரு மாற்றுத்திறனாளி சந்துனி ஜயசுந்தர தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இரண்டு தகுதிகாண் போட்டிகள் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் தனஞ்சனா இரண்டாம் இடத்தைப் பெற்றதால் இறுதிப் போட்டியில் பதக்கம் ஒன்றை வென்றெடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

T47 வகைப் பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர்  இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி மொஹம்மத் சவ்ரான் (11.35  செக்.) கடைசி இடத்தைப் பெற்றார்.

F40 வகைப் பிரிவு ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய மலீஷ சீமாஹேவகே (9.34 மீற்றர்) நான்காம் இடத்தைப் பெற்றார்.

T42 வகைப் பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் சரித்த இந்த்ரபால (5.09 மீற்றர்) கடைசி இடத்தைப் பெற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.