செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விதார்த்தின் ‘கார்பன்’ முன்னோட்டம் வெளியீடு

விதார்த்தின் ‘கார்பன்’ முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

நடிகர் விதார்த் நடிப்பில் வெளியாகும் இருபத்தி ஐந்தாவது திரைப்படம் ‘கார்பன்’. 

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை திரை உலக பிரபலங்கள் லோகேஷ் கனகராஜ், ஜெயம் ரவி, நடிகர் ஆர்யா, இயக்குநர் முத்தையா, பாக்கியராஜ் கண்ணன், ராஜேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் இணையத்தில் வெளியிட்டனர்.

‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கார்பன்’. 

இதில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் மாரிமுத்து, அஜய், விக்ரம் ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”நாயகனுக்கு அடிக்கடி கனவு ஏற்படுகிறது. கனவிற்கும் அவருடைய யதார்த்த வாழ்க்கைக்கும் ஏராளமான தொடர்பு உண்டாகிறது. இதனை திரில்லர் பாணியிலான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.

படத்தின் முன்னோட்டத்தில் கனவைக் கண்டு அச்சப்படும் வேடத்தில் விதார்த் அற்புதமாக நடித்திருப்பதால் ‘கார்பன்’ இரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.