செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் போலந்தில் துப்பாக்கிச் சூடு: இங்கிலாந்து பிரஜை உட்பட 6 பேர் பலி; இன்றும் தேசிய துக்க தினம்

போலந்தில் துப்பாக்கிச் சூடு: இங்கிலாந்து பிரஜை உட்பட 6 பேர் பலி; இன்றும் தேசிய துக்க தினம்

1 minutes read

போலந்தின் தென்பகுதி நகரமான கிராகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தை அடுத்து, நேற்றைய நாளையும் (08) மற்றும் இன்றும் (09) தேசிய துக்க தினங்களாக அந்நாட்டு ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி பிரகடனப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை கிராகோ நகரின் பிரதான சதுக்கத்தில் காரில் வந்த நபர் ஒருவர், பொதுமக்களை இலக்கு வைத்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இத்தாக்குதலில் 4 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதுடன், ஆஸ்திரியா, ஜேர்மனி, போர்த்துக்கல், ரஷ்யா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 5 வெளிநாட்டுப் பிரஜைகளும் காயமடைந்துள்ளனர்.

தகவல் கிடைத்த மூன்றே நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிதாரியைச் சுட்டுப் பிடித்துள்ளனர். இதனால் மேலும் ஏற்படவிருந்த பாரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மார்சின் கியர்வின்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதலை நடத்தியவர் 24 வயதுடைய போலந்துப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவப் பாணியிலான ஆடைகளை அணிந்திருந்த அவர், சட்டபூர்வ அனுமதி பெற்ற AR-15 ரக இராணுவத் தர துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, துப்பாக்கிதாரி வசித்து வந்த ஒஸ்ட்ரோவியெக் ஸ்வியெண்டோக்ரிஸ்கி நகரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 2 பெண்கள் மற்றும் ஓர் ஆண் உட்பட மேலும் மூன்று சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் துப்பாக்கிதாரியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம் என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.