புது முகங்கள் நடிப்பில் தயாராகி, சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி, நான்கு விருதுகளை வென்று திரை ஆர்வலர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் ‘வன மடி ‘ எனும் தமிழ் திரைப்படம் – விரைவில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக பிரபலமான விஜய் ஆம்ஸ்ட்ராங் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி: திரைப்படத்தில் முற்றிலும் புது முகங்கள் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராலே ராஜன் இசையமைத்திருக்கிறார். இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் இந்த திரைப்படத்தை சென்டர் சீட் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை புத்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் படத்தொகுப்பாளரும், தயாரிப்பாளருமான பி. லெனின் வழங்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இயந்திர கதியில் நகரும் எம்முடைய வாழ்க்கையில்.. கால மாற்றங்கள் எம்மையும் , எம்முடைய சந்ததிகளையும் மீள் இயலாத வலிமையான சுழிக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களுடனான அன்பையும்… தங்களுக்குள் அன்பை தேடுதலை குறைத்துக் கொண்டுள்ளதால்… இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இப்படத்தின் கதை – திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி.. உலகளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் விரைவில் படமாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.