செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஒளி | த. செல்வா

ஒளி | த. செல்வா

0 minutes read

ஒளியை எங்ஙனம் ஒழித்து வைக்க
யாரோ சொன்னான்
இருளுங் குறைந்த ஒளியென
ஒளியில்லா இடத்தைத் தேடி
அடையாப் போதில்
என் வாழ்வே இருளென முகாரித் தென்ன பயன்

நம்பிக்கையில் சொட்டொளியையாவது
பருகின்
பாலும் நீரும் வேறாகுமென்பேன்

ஒளி பற்றி ஒழித்திருந்து
இசைக்க முடியாது
காற்றின் வீசல் போல்
ககனப் பரவல் போல்
அலையின் துடிப்புப் போல்
ஆத்மாவில் ஆழ் ஒளி ஊறின்
இருண்ட யுகத்தின் பாடல்களில்க் கூட
பொருண்மை மாறும்
காருண்யம் ஏறும்

ஆத்மாவின் ஆழ் ஒளியால்
மீண்ட கிரோசிமா நாகசாகி போல்
மீண்ட இஸ்ரேலியர்கள் போல்
மீண்ட கட்டலேனியா போல்
மீண்ட குர்திஸ்தானியர் போல்
மீட்சி மிசையாகும்

இனி ஒளியை ஒழித்து வைக்கப் போவதுமில்லை
தேடப்போவதுமில்லை
யாராவது என்னை நோகடித்தால்
யாராவது என்னை அடிமைப் படுத்தினால்
யாராவது என்னை சுமந்தபடியிருந்தால்
யாராவது என்னில் சவாரி செய்தால்
நான் ஒளியை எடுத்து அருந்துவேன்

ஒளி ஒரு விடுதலை
ஒளி ஒரு தாலாட்டு
ஒளி ஒரு தியானம்
ஒளி ஒரு ஔடதம்
ஒளி ஒரு கடவுள்
ஒளி ஒரு வழி ……………..என்றவாறு

த.செல்வா
இரவு 9.05
மலை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.