செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பூசணி அவியல்!

பூசணி அவியல்!

1 minutes read

தேவையானவை:
வெள்ளைப் பூசணி ஒரு துண்டு
மஞ்சள் பூசணி ஒரு துண்டு
கருணைக்கிழங்கு 100 கிராம்
அவரைக்காய் 100 கிராம்
கொத்தவரங்காய் 100 கிராம்
கத்தரிக்காய்,
கருனைக்கிழங்கு,
வாழைக்காய்,
கேரட் தலா ஒன்று
பீன்ஸ் 10
முருங்கைக்காய் ஒன்று
மாங்காய் 100 கிராம்
உரித்த மொச்சைக் கொட்டை,
காராமணி,
துவரை (மூன்றும் சேர்த்து) 200 கிராம்
தயிர் 200 மில்லி
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
சீரகம் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் ஒரு குழிக்கரண்டி + ஒரு டீஸ்பூன்

அரைக்க
தேங்காய் துருவல் ஒரு கப்
பச்சை மிளகாய் 8
சீரகம் ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்

பக்குவம்
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கருணைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், மாங்காய், வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, வாழைக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை ஒரு இன்ச் அளவில் வெட்டி குக்கரில் சேர்த்து, உரித்த மொச்சை, துவரை, காராமணி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். பின்பு அதில் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, தயிரும் ஒரு குழிக்கரண்டி தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலந்தால், சுவையான கனு அவியல் தயார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.