செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் உருளைக்கிழங்கு சாதம்!

உருளைக்கிழங்கு சாதம்!

1 minutes read

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
மசாலா பொடி தயாரிக்க
தனியா – 2 tsp
மிளகாய் – 5
கடுகு – 1 tsp
கடலைப் பருப்பு – 1 tsp
உளுத்தம் பருப்பு – 1 tsp
வெந்தையம் – 1 tsp
சீரகம் – 1 tsp
மிளகு – 1 tsp

தாளிக்க
எண்ணெய் – 2 tsp
கடுகு – 1 tsp
கடலைப் பருப்பு – 2 tsp
உளுத்தம்பருப்பு – 1 tsp
காய்ந்த மிளகாய் – 2
கொத்தம்மலி கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

அரிசியை உதிரியாக வேக வைத்து வெப்பம் தணிய ஆற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடி தயாரிக்கத் தேவையானப் பொருட்களை எண்ணெய் இன்றி கடாயில் வறுக்கவும். சூடு குறைந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும். தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும். அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்க்கவும். தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். தற்போது அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கு வெந்ததும் ஆற வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும். இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவவும். சுவையான உருளைக் கிழங்குச் சாதம் தயார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.