செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது….!

அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது….!

1 minutes read

கொழுப்பில் 2 வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது, அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்த கொழுப்பு படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.

கொழுப்பு ரத்தத்தில் கரையாது. அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது. இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன.

இதில் முதலாவது வகை, அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன். அதாவது ஆங்கிலத்தில், ஹை டென்சிடி லிபோபுரோட்டீன் (எச்.டி.எல்.) அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொழுப்பு சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு வரும் ஆபத்தை இந்த வகை கொழுப்பு குறைக்கிறது.

குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (லோ டென்சிடி லிபோபுரோட்டீன்-எல்.டி.எல்.). குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொழுப்பு சுமந்து செல்லப்பட்டால், அது `கெட்ட’ கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் ஆபத்தை இந்த வகை கொழுப்பு அதிகரிக்கிறது.

பல குடும்பங்களில் ரத்த மிகைக் கொழுப்பு காணப்படலாம். ஆனால், பெரும்பாலும் ரத்த மிகைக் கொழுப்புக்கு காரணம், ஆரோக்கியமற்ற உணவும் உடலியக்கச் செயல்பாடு இல்லாததும்தான். அறிகுறிகளையோ எச்சரிக்கை சமிக்ஞைகளையோ ரத்த மிகைக் கொழுப்பு அரிதாகவே வெளிப்படுத்துகிறது.

ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். இவை பொதுவாகக் குமிழி போல இருக்கும். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம்.

சிலவேளை ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு போன்ற கண்டறியப்படாத மருத்துவ நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ரத்த மிகைக் கொழுப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமானவற்றை உண்ண வேண்டும். அவற்றில் பழங்கள், காய்கள் போன்றவை அதிகமாக இருக்க வேண்டும். உடல் எடையைப் பராமரியுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள்.

மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் உங்களுக்கு உள்ள ரத்த மிகைக் கொழுப்பின் அளவு குறையவில்லை என்றால், டாக்டர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பார். வெளிப்படையாக மாற்றங்கள் தெரியாவிட்டாலும் டாக்டர் தரும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.