செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மலேசியாவில் புலம்பெயர்ந்தவர்களை கடத்தும் தரகர்களாக செயல்பட்டவர்கள் கைது

மலேசியாவில் புலம்பெயர்ந்தவர்களை கடத்தும் தரகர்களாக செயல்பட்டவர்கள் கைது

1 minutes read

மலேசியாவுக்குள் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் ஆடகடத்தல் தரகர்களாக செயல்பட்ட மியான்மர் நாட்டவர் உள்ளிட்ட 4 பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, Kampung Cherang Hangus பகுதியில் மலேசிய காவல்துறை நடத்திய சோதனையில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 மியான்மர் நாட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என Pasir Mas மாவட்ட காவல் துறையின் தலைமை அதிகாரி நசர்யூதின் நசிர் தெரிவித்துள்ளார். 

இந்த 24 பேரில் 6 பேர் பெண்கள், 18 பேர் ஆண்களாவர். மியான்மர், லாவோஸ், இந்தோனேசியா ஆகிய அருகாமை நாடுகளில் உள்ள ஏழ்மையான மக்களை குறிவைக்கும் தரகர்கள் அங்கிருந்து பல்வேறு வழிகளில் மலேசியாவுக்குள் ஆட்களை கடத்தி வந்து பணி அமர்த்துகின்றனர். 

இவ்வாறு பணி அமர்த்தப்படுபவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாகும் நிலையும் முறையான ஆவணங்களின்றி மலேசிய அதிகாரிகளிடம் சிக்கும் நிலையும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.