செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கலைஞர் எழுதுகோல் விருது | தேர்வுக் குழு அமைப்பு

கலைஞர் எழுதுகோல் விருது | தேர்வுக் குழு அமைப்பு

1 minutes read

கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழு அமைப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த நியமிப்பை அறிவித்துள்ளார்.

“ஆண்டுதோறும் இதழாளர்களில் சிறப்பாகப் பங்களிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கலைஞர் பெயரில் எழுதுகோல் விருதும், ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பில் அழைப்பு வந்தது. ”இந்த விருது தக்கவர்களைச் சென்றடைவதாக இருக்க வேண்டும்; அதன் நிமித்தம் அரசே தன்னுடைய பிரதிநிதிகள் வழியே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறைக்கு மாற்றாக, பத்திரிகையாளர்கள் – பேராசிரியர்கள் அடங்கிய ஒரு தேர்வுக் குழுவின் வழி விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்; இந்தக் குழுவில் நீங்கள் இடம்பெற வேண்டும் என்பதும் முதல்வரின் விருப்பம்” என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டின் பல நூறு பத்திரிகையாளர்கள் இடையே, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஏனையோருடன் ஒப்பிட ‘மூத்த பத்திரிகையாளர்’ எனும் அடைமொழிக்கான வயதோ, அனுபவமோ வந்துவிடவில்லை என்றாலும், அரசு என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒப்புக்கொண்டேன். இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கான பணி இது. அதற்குள் தமிழ்நாட்டின் ஊடகத் துறையில் மதிப்புமிக்க ஒரு விருதாக ‘கலைஞர் எழுதுகோல் விருது’ திகழும் வகையில் தேர்வுகள் அமைந்திட என்னாலான பணிகளை மேற்கொள்வேன். முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி!“ என்று பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.