
மறுக்கப்பட்ட உந்தன் அன்பின்
பெரு விருட்சங்களில்
நான் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
எந்தன் உதிர்வின் இசையை அருந்தி பிறர் போதை இன்பம் நுகரினும்
விழும் கண்ணீர்த் துளியின் முத்துக்களில்
எந்தன் முத்தங்களுக்கான ஏக்கங்கள் நாவு அசைத்து தகித்திருக்கும்
அன்பின் பெருவான வெளி எங்கும்
என் கவலை ரிசிகள் படர்ந்தால்
உந்தன் தூக்க நிசி கெடுமென
நடிப்பில் சிரிக்கும் என்னுள்
ஓராயிரம் துயரப் பறவைகள்
பறந்த லைந்து
கூடற்ற குதூகல மிழக்கும்
உன் அன்பு வானாக விரிந்தும்
மகவிழந்த மானாகா நானேங்கும் இவ்விடியலில்
என்ன விடுதலை உண்டு பேரரசியே
நிலங் காண ஏங்கும் சனம் போல்
என் வெறுவானம் அழுத நீரில்
ஒரு யுகமே
தொலையுமல்லவா
கண்ணே!
6.40
த.செல்வா
மலை