வட்டி வீதத்தில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், நிலையான வைப்புத்தொகை வசதிக்கான வட்டியை 6.5 வீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடன் வசதிக்கான வட்டியை 7.5 வீதமாக அதிகரிப்பதற்கும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளின் மூலம் கொள்கை வீதம் 10.5 வீதமாக தானாகவே அதிகரிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே, சட்டப்பூர்வ இருப்பு வீதம் 4 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதனைத் தவிர ஒழுங்குபடுத்தப்பட்ட வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கும் மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், கடனட்டைக்கான உச்சபட்ச வட்டி 20 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வங்கி மிகை எடுப்புக்கான அதிகபட்ச வட்டி 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடகு வசதிகளுக்கான உச்சபட்ச வட்டி 12 சதவீதமாகுமென மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.