செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

1 minutes read

முருங்கை மரம் பார்க்கும் நம் கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமல்ல, உண்மையில் ஒரு அதிசய மரம் ஆகும். முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நாம் சாப்பிட கூடியதாக இருப்பதால் இது ஒரு சூப்பர் ஃபுட்களை தரும் அற்புத மரமாக குறிப்பிடப்படுகிறது. முருங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அது தரும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, பல நூற்றாண்டுகளாக மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.

முருங்கை மரத்தின் முழுப் பகுதியும் வெவ்வேறு வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. முருங்கை பூக்கள், முருங்கைக்காய், முருங்கை இலை என முருங்கை மரத்தின் பகுதிகள் நமக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருகின்றன. இந்த வசந்த காலத்தில் இவற்றை பல வடிவங்களில் உணவில் சேர்த்து உட்கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

கொலஸ்ட்ராலை குறைக்கும் : முருங்கை மரத்தின் இலைகள் ஹை கொலஸ்ட்ராலுக்கு எதிரான நம்பகமான தீர்வை தரும். ஏற்ற இறக்கமான கொலஸ்ட்ரால் அளவுகள் சிக்கலான இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் முருங்கை இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அதிக கொலஸ்ட்ரால் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.