செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பெயர் மாற்றம் பெரும் குரங்கம்மை

பெயர் மாற்றம் பெரும் குரங்கம்மை

0 minutes read

குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் ஒன்றை வைப்பதற்கு உலக சுகாதார அமைப்பு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் நோய்க்கு “பாரபட்சமற்ற மற்றும் களங்கப்படுத்தாத பெயர் ஒன்று அவசியமாக உள்ளது” என்று 30 விஞ்ஞானிகள் கடந்த வாரம் கடிதம் ஒன்றை எழுதிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸை ஆபிரிக்கருடையது என்று குறிப்பிடுவது தவறானது மற்றும் பாரபட்சமானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 1,600 சம்பவங்கள் உலகெங்கும் பதிவாகியுள்ளன.

குரங்கம்மை ஏற்கனவே நிரந்தர நோயாகக் கருதப்படும் நாடுகளில் 72 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள 32 நாடுகளில் யாரும் அந்நோயால் மரணமடையவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.