செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் குடும்பத்துடன் மீண்டும் இணைய விரும்பும் இளவரசர் ஹரி சிலருக்கு உடன்பாடு இல்லை என்கிறார்!

குடும்பத்துடன் மீண்டும் இணைய விரும்பும் இளவரசர் ஹரி சிலருக்கு உடன்பாடு இல்லை என்கிறார்!

1 minutes read

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் இளைய மகனான இளவரசர் ஹரி, மீண்டும் தமது குடும்பத்தினருடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவரும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் தமது உத்தியோகபூர்வ அரச பொறுப்புக்களிலிருந்து விலகி, அமெரிக்காவில் குடியேறியிருந்தனர்.

அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த பின்னர், அரச குடும்பத்தினர் மீது இருவரும் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இதன் காரணமாக மூத்த சகோதரரான இளவரசர் வில்லியமுடனான தொடர்புகளை இளவரசர் ஹரி முற்றாகத் துண்டித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அண்மையில் தமது குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்குத் திரும்பிய இளவரசர் ஹரி, தனது தந்தையான மன்னர் சார்ல்ஸை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச சஞ்சிகையான GQ இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், மீண்டும் அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். சகோதரர்களுக்கு இடையிலும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது எனவும், ஒரு சிலருக்கு சமரசம் செய்துகொள்வதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு மீண்டும் குடும்ப உறவுகள் தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.