செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ரோட்டு கடை கொத்து பரோட்டா

ரோட்டு கடை கொத்து பரோட்டா

2 minutes read

தேவையான பொருள்கள்:

பரோட்டா – 2

முட்டை – 1

வெங்காயம் – 2

எண்ணெய் – 4 ஸ்பூன்

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

பூண்டு – 8 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:

  • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.
  • அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.
  • அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.
  • இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More