செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட சந்தானம் படத்தின் போஸ்டர்..

இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட சந்தானம் படத்தின் போஸ்டர்..

1 minutes read

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சாண்டா 15. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா போப் இணைந்துள்ளார்.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இப்படத்தை புரொடக்‌ஷன் எண்10 (சாண்டா 15) என்று தயாரித்துள்ளனர்.

சந்தானத்தின் 15-வது திரைப்படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார்.

கிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தானத்தின் 15-வது படத்திற்கு “கிக்” என படக்குழு பெயர் வைத்துள்ளது. மேலும், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.