செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு

அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு

1 minutes read

ஈரான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சில பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, அமெரிக்காவின் மாஸசூஸட்ஸ் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்க அரசு விதித்துள்ள தடைகளையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு, தேசிய ஈரான்-அமெரிக்க கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தடை குறித்த சட்ட விதிமுறைகளைத் தவறாகப் பொருள்படுத்திக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்தக் கவுன்சில் தெரிவித்தது.

ஈரானில் எரிசக்தி அல்லது அணுசக்தித் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இருக்கக் கூடிய அந்நாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவில் கல்வி கற்க வருவதற்கான விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்க நாடாளுமன்றம் 2012-ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

இதன் அடிப்படையில், பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் சில பட்டப் படிப்புகளில் சேர ஈரான் நாட்டு மாணவர்களை அனுமதிப்பதில்லை என அந்தப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், தகுதி வாய்ந்த ஈரானிய மாணவர்கள் பொறியியல், அறிவியல் கல்வி பெறுவதை அந்தச் சட்டம் தடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு மாணவரின் விண்ணப்பமும் தனித்தனியாக ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படுகிறது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.