செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா

பாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா

1 minutes read

உடல் எடை குறைப்பில் முக்கியமானதே எடையை சரியாக நிர்வாகிப்பது தான். இப்படி கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், நீங்கள் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செலவிட்ட கலோரிகளை அது திரும்ப கொண்டு வந்துவிடும்.

அதற்காக எல்லா நொறுக்குத் தீனிகளும் தவறானது என ஒதுக்கிவிடவும் முடியாது. கலோரிகளை கூட்டாத, உடலுக்கு தீங்கில்லாத நல்ல நொறுக்குத்தீனிகளும் இருக்க தான் செய்கிறது.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது வரும் பெரும்பாலானோருக்கு சில வகை உணவுகள் மீது தீராத ஆசை ஏற்படும். அப்படி உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருப்பவர்கள் கண்ட நொறுக்குத்தீனிகளை முயற்சிப்பதற்கு பதிலாக பாப்கார்னை சாப்பிட்டால் உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாப்கார்னில் கலோரிகள் அளவு குறைவு என்பதால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மேலும், இதில் நார் சத்தும் இருப்பதால் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

அதிலும் பாப்கார்ன்களில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருப்பதால் எடை குறைப்புக்கு மிகச்சிறந்த உணவு என்று கூறப்படுகிறது. பாப்கார்னில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் சருமத்திற்கு நல்ல போஷாக்கை கொடுப்பது போலவே உடலுக்கும் கொடுக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.