ஈராக்கில் நேற்று 7 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள். தலைநகர் பாக்தாத் அருகே உள்ள ஜிசிர்தியாலா மாவட்டத்தில் 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது.
முதல் குண்டு வர்த்தகம் மிகுந்த பகுதியில் நடந்தது. அதன் அருகே குடியிருப்புகள், கடைகள் அதிக அளவில் உள்ளன. அதே பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்தது. இவற்றில் 24 பேர் பலியாகினர்.
மற்றும் 5 குண்டுகள் பாக்தாத் நகரை சுற்றி வெடித்தது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. வடக்கு மற்றும் மேற்கு ஈராக் பகுதிகள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்கள் தான் பாக்தாத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
எனவே, அவர்கள் தான் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.