ஜிம்பாப்வேக்கு எதிராக நேற்று புயல் வேகத்தில் ரன் சேர்த்த வெஸ்ட் இண்டீசில் கெய்ல், உலக கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
* டெஸ்டில் முச்சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், சர்வதேச டுவென்டி – 20 போட்டியில் சதம் அடித்த உலகின் முதல் வீரர் கெய்ல் தான்.
* உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 215 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார் கெய்ல்.
* ஒரு நாள் அரங்கில் இரட்டை சதம் விளாசிய நான்காவது வீரரானார் கெய்ல். இதற்கு முன் இந்தியாவின் சச்சின், சேவக் தலா ஒருமுறை, ரோகித் சர்மா இரண்டு முறை இந்த மைல்கல்லை எட்டினர்.