ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பஞ்ச்ஷீர் மாகாணத்தில் மட்டும் குறைந்தது 168 பேர் பலியாகியிருப்பதாகவும், இதுபோன்ற பனிச்சரிவை இதுவரை பார்த்ததில்லை என்றும் மாகாண ஆளுநர் பொறுப்பு வகிக்கும் அப்துல் ரஹ்மான் கபிரி இன்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடுமையான பனி பொழிவைத் தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துவிட்டன.
கடும் பனிப்பொழிவால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மீட்பு பணியாளர்கள் செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர நூரிஸ்தான் மற்றும் படாக்க்ஷான் மாகாணங்களிலும் பலர் பலியாகியுள்ளனர். நங்கர்ஹார் மற்றும் லாக்மான் மாகாணங்களின் கிழக்கு மற்றும் பமியான் மாகாணத்தின் மத்திய பகுதியிலும் பலியாகியுள்ளனர். பனிக்கு அடியில் சிக்கி பலியான மற்றும் உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.