செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உக்ரைனில் பலி எண்ணிக்கை 6,000உக்ரைனில் பலி எண்ணிக்கை 6,000

உக்ரைனில் பலி எண்ணிக்கை 6,000உக்ரைனில் பலி எண்ணிக்கை 6,000

1 minutes read

கிழக்கு உக்ரைனில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மனித ஐ.நா.மனித உரிமைகள் குழுத் தலைவர் ùஸயித் ராத் அல்-ஹுசைன் அறிக்கையை பெர்லினில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

கடந்த மூன்று மாத கால அளவுக்கான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரு தரப்பினரிடையே நடைபெற்ற சண்டையைத் தொர்ந்து, கடந்த சில வாரங்களில் மட்டுமே, நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வீரர்களும் கன ரக ஆயுதங்களும் கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு, லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு என்று கூறிக் கொள்ளும் பகுதிகளைச் சேர்ந்த குழுக்களின் வலிமையை இது அதிகரித்து வருவதால், அவர்களால் அரசுப் படையினரை எதிர்க்கவும் புதிய பகுதிகளில் சண்டையிடவும் முடிகிறது.

சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேற பயந்து அல்லது வெளியேற இயலாத நிலையில் பலர் உள்ளனர். தங்களது குழந்தைகளையும், குடும்பத்தினரையும், சொத்துகளையும் காப்பாற்றும் பொருட்டு பலர் தங்களது இடத்திலேயே தங்கிவிட்டனர்.

இரு தரப்பினரும் ஆட்களைப் பிடித்து அடைத்து வைத்தல், துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக நம்பத் தகுந்த புகார்கள் கிடைத்துள்ளன.

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளனர். இதன் மூலம் ஏராளமான பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பல்களின் பிடியில் சிக்கும் ஆபத்து உள்ளது.

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ஏற்பட்ட உடன்படிக்கையை இரு தரப்பினரும் மதித்து, சண்டை நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து கன ரக ஆயுதங்களுடன் வெளியேற வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.