நால்வர் நாங்கள் !!!!
நாய் கூட்டம் என்ற பட்டப்
பெயர் – எங்கள் குறும்பிற்கு
முதல் பாடம் முடிய முன்
முடிப்போம் உணவை
பேப்பரில் வால் கிழித்து
பின் பக்கம் செருகிச் சிரிப்போம்
கல் எறிந்த ஊமத்தங்காயை
கடுகளவும் பகிர்ந்து தின்போம்
புதுக் கொப்பி என்றாலே
பிறந்தநாள் கொண்டாடுவோம்
ஒப்படை என்றால்
ஒரே விடையை மாத்தி எழுதி ஒப்படைப்போம்
பரீட்சைக்கு முதல் நாள் மட்டும்
விழுந்து விழுந்து படிப்போம்
கயர் கண்ட வெள்ளை உடுப்பை
சோக்கு பூசி சமாளிப்போம்
இரண்டு நிமிடம் கிடைத்தாலும்
ஈ அடிச்சான் விளையாடுவோம்
வாங்கிய ஒரு உடுப்பை
மாத்தி உடுத்தி படம் எடுப்போம்
குளம் குட்டை கண்டாலே
குதிக்காமல் வரமாட்டோம்
விளாங்காய் பொறுக்கி
பத்தைக்குள் பதுக்கி வைப்போம்
சிறு பொழுது கிடைத்தாலும்
உப்புத்தூள் பிரட்டித் திண்போம்
நித்திரைத் தூக்கத்தில்
கரிச்சட்டி மீசை வைப்போம்
ஒரு சைக்கிள் காத்துப் போனால்
மற்றவற்றை வீடு வரை உருட்டி போவோம்
பூசைக்கு போவதென்றால்
பொங்கல் நேரம் பாத்துப் போவோம்
மாப்பூசி நல்லிரவில் பேயென்று
வெருட்டுவோம்
எத்தனை நினைவுகள்
என் நண்பர்களோடு வெவ்வேறு
வாழ்வுலகில் நால்வரும்
தனித்தனி இன்று
இன்றே இவையெல்லாம்
நினைத்தாலும் நடக்காது
முல்லையில் ஹர்வி