செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பிரபாகரன் விற்ற மோதிரம் | பொன் காந்தன்

பிரபாகரன் விற்ற மோதிரம் | பொன் காந்தன்

0 minutes read

செல்லக்கிளியின் மாடும்
பிரபாகரன் விற்ற மோதிரமும்

எங்கோ கேட்ட வார்த்தைகள்
எதிரே வந்து சதிராடுகிறது
கண்ணே
உன் காலடியில் நரகமென அசரீரி
பூபாலசிங்கம் கடை பேப்பரில்
புறநானூறு இல்லை
பிதாவின் முன் மன்றாட்டமும்
புதிதாய் மாறிவிட்டது
வழி தவறிய மந்தைகளோடும்
மனம் பேதலித்து நிற்கிறது மண்
கள்ளுக் கடை போகாதே
காலை பிடித்து கெஞ்சிய பாடல்
பிஞ்சுகள் இழுக்கும் போதையினால்
புலம்பாதோ மாறி
மாப்பிள்ளை தோழன் மோதிரத்தை
வேலுப்பிள்ளை மகன் விற்றான்
வில்லும் அம்பும் வாங்கி
விலங்குடைக்க விதை போட்டான்
செல்லக்கிளியின் மாடோ
முள்ளற்ற வளவுக்கு முதலாச்சு
இன்றந்த வேலிக்கு என்னாயிற்று
பண்ணை மந்து கொத்தி
பலன் கிடைக்குமா
பின்னே
சிரமதானம் எங்குதான் செய்ய
மனதில் தான் வேறில்லை
எச்சங்களின் வீரியம் அறுக்க
நச்சு விதை நாசூக்காய் தூவப்பட்டு விட்டது
கச்சையை
தானாக தானம் செய்யதான் கெரோயின்
மிச்சம் மீதி இன்றி
தமிழன் முறுக்கு கிறுக்காக கஞ்சா
துச்சமென உயிர் ஊதிய குலத்தின்
தொடை நடுங்க தொடங்கும் இனி
தூண்டில் இட எவனுக்கோ இலகு
ஒரு கட்டத்தில்
ஊரே தள்ளாடும்
உலக படத்தில் ஈழம் மறையும்
அதற்கோர் சதியின் காலமிது
மில்லரின் வண்டியில்
கந்தகத்துக்கு பதில் கஞ்சா
அங்கயற்கன்னி யாக்கட்டில்
ஐம்பது கிராம் கெரோயின்
போர்க் புறப்பட முன்
ஒரு போத்தில் கசிப்பும் இருந்திருந்தால்
இன்று
இதை எழுத நானும்
தமிழர் எச்சமும் எரிந்து நாளாகிருக்கும்

பொன் காந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.