செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பெண் | த.செல்வா

பெண் | த.செல்வா

0 minutes read

பெண்
அற்புதத்தின் ஆதி
அவளுக்குள் உழன்று அவளைப் புளிந்து
ஆனந்த வானை வரையும் நிர்மலத் தெய்வம்
பெண்ணின்றி மண்ணில் புன்னகை ஜனிக்குமா
கண்ணில்லா பிறவி போல் வாழ்வு ஆகுமே
பெண்வீணை மீட்டும் ஆணின் கைகள் வீணையாகின்றது
பெண்ணுக்காய் மலர்பறிக்கும் ஆணின் கைகள் கதிராகின்றது
பெண்கையால் உண்ணும்
உணவால் ஆயுள் பெருக்கிறது
பெண்பார்வை உன்கோர்வையானால்
ஆண்மை நீள்கிறது
பெண் இந்தப் பூமியின் அற்புத அட்சயம்
உலக அதிசயங்களை விஞ்சிய திவ்விய பந்தம்
அவள் தரும் திட்டும் புன்னகையும்
அன்பின் தேசிய கீதம்
ஆகாய வாணியும் அவளே
பூமா தேவியும் அவளே
அவள் நரம்புகளில் ஓடும்
செங்குருதியால் முளையாகிறான் ஆண்
வானில் விழும் மழைத்துளிகள்
மலர்களுக்கு உயிர்பாய்ச்சுவதைப்போல்
அவள் சிந்தும் அமுத ரசம்
அன்பின் வீட்டிற்கு உணர்வு பாய்ச்சுவதே உசிதம்

இரவு 9.18
மலை
த.செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.