செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் காலங்கள் ஒரு நாள் மாறாமல் போகுமா | பா.உதயன்

காலங்கள் ஒரு நாள் மாறாமல் போகுமா | பா.உதயன்

1 minutes read

காலம் ஒரு நாள் வாரது போகுமா
கவலைகள் ஒரு நாள் தீராது போகுமா
கண்ணீர் ஒர் நாள் காயாது போகுமா
காற்று ஒரு நாள் வீசாமல் போகுமா

காலங்கள் ஒரு நாள் மாறாமல் போகுமா
கனவுகள் ஒரு நாள் உயிர்காமல் போகுமா
கதவுகள் ஒரு நாள் திறக்கமால் போகுமா
துன்பங்கள் ஒரு நாள் தீராமல் போகுமா

பாதைகள் ஒரு நாள் தெரியமால் போகுமா
பயணங்கள் ஒரு நாள் முடியாமல் போகுமா
முற்றத்து மல்லிகை பூக்காமல் போகுமா
பக்கத்து கோவில் மணி ஒலிக்காமல் போகுமா

இரவுகள் ஒரு நாள் விடியமால் போகுமா
நிலவு ஒரு நாள் பூக்காமல் போகுமா
வாழ்வு ஒரு நாள் மாறாது போகுமா
வசந்தம் ஒருநாள் வீசாமல் போகுமா

வானம் ஒரு நாள் திறக்காமல் போகுமா
மழை ஒரு நாள் வாராது போகுமா
சூரியன் ஒரு நாள் உதிக்காமல் போகுமா
சுதந்திரம் ஒரு நாள் வாராமல் போகுமோ

நாளை ஒரு நாள் பூக்காமல் புலருமா
நம்பிக்கை ஒருநாள் உயிர்க்காமல் போகுமா
தாயின் பாசம் இல்லாது போகுமா
எங்கள் தமிழ் ஒரு நாள் நிமிராது போகுமா

உண்மை ஒரு நாள் வெல்லாமல் போகுமோ
உலகம் ஒரு நாள் திரும்பாமல் போகுமோ
தர்மம் ஒருநாள் நிலைக்காமல் போகுமோ
நீதி ஒரு நாள் வெல்லாமல் போகுமோ

ஏழைகள் வாழ்வு ஒரு நாள் உயராமல் போகுமோ
எங்கும் சமத்துவம் வாராமல் போகுமோ
அன்பும் அறமும் இல்லாமல் போகுமா
எங்கும் அன்பே சிவம் என்றில்லாது போகுமா

பறவைகள் ஒரு நாள் பாடாமல் போகுமா
குயில்கள் ஒரு நாள் கூவாமல் போகுமா
மாற்றங்கள் ஒரு நாள் மாறாமல் போகுமா
மாறுதல் என்பது நடக்காமல் போகுமா

பா. உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.