செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை ரேவதி சில வருட இடைவெளியில் இயக்குனராக

நடிகை ரேவதி சில வருட இடைவெளியில் இயக்குனராக

1 minutes read

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கிய நடிகை ரேவதி ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்திக், பிரபு உட்பட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன் ‘மித்ரு மை ப்ரண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படத்தின் வெற்றியையடுத்து ‘பிர் மிலிங்கே’, ‘மும்பை கட்டிங்’ என இரண்டு இந்தி படங்களை இயக்கினார். பின்னர் ‘கேரளா கபே’ என்ற மலையாளப்படத்தையும் இயக்கிய ரேவதி, அப்படத்துக்குப் பின்னர் வேறு படங்கள் எதுவும் இயக்கவில்லை.

சென்னையிலிருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த ரேவதி தமிழ்ப்படங்களை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக மலையாளத்திலும் அதிகமாக படங்களில் நடிப்பதில்லை. இதற்கிடையில் தனது ஐந்தாவது படத்தை விரைவில் ரேவதி இயக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிறுகதை ஒன்றை தழுவி இந்தப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.