இந்தியாவின் திருப்பூர் கலெக்ட்டர் அலுவலகத்தின் முன்பு பெண்ணொருவர் தீக்குளிக்க முயன்றார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது என்னவென்றால் அந்த பெண் கணவனின் மதுப்பழக்கத்தால் தினமும் கணவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். தட்டிக்கேட்ட பெண்ணின் தாயும் பெண்ணின் கணவனால் தாக்கப்பட்டுள்ளார்.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிசில் புகார் செய்த போதிலும் அதற்கான தகுந்த நடவடிக்கை பொலிசினால் எடுக்கப்படாத நிலையில் அந்த பெண் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்துள்ளார்.