இலங்கையில் மொனராகலை – புத்தலவில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12:11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் இந்த அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவலின் படி, இந்தியப் பெருங்கடலில் இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளன.