அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வானக தரிப்பிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க் பேஸ் பல்கலைக்கழகம் அருகே மான்ஹாட்டன் பகுதியில் 4 மாடிகள் கொண்ட கட்டிடத்தில், கார்களை வரிசையாக நிறுத்தும் தரிப்பிடம் அமைந்துள்ளது.
இதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தமையால் சிறிய மற்றும் பெரிய ரக கார்கள் என ஒன்றன் மீது ஒன்றாக விழுந்தன. அவை கீழ் தளத்தின் மீது விழுந்ததில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
தகவல் அறிந்து, அவசரகால பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதில், சந்தேகத்திற்குரிய வகையில் சதிச் செயல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய அனைவரும் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
4 மாடிகள் கொண்ட அந்த கட்டிடம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை தொடருவதில் ஆபத்துக் காணப்படுவதாக தெரியவருகின்றது.