அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் நகரத்தில் அமைந்துள்ள கார்ட்டர் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார்.
எனினும், குறித்த பஸ்ஸில் 66 மாணவர்கள் பயணித்த நிலையில், பஸ்ஸை உடனடியாக நிறுத்த முயற்சித்த போதும் அவரால் முடியவில்லை.
இனையடுத்து, உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆட்களை அழைத்த சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார்.
வண்டி போக்குவரத்து மிகுந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், இதனைக் கண்ட டில்லன் ரீவ்ஸ் என்ற 7-ம் வகுப்பு மாணவர், துரிதமாகச் செயல்பட்டு ஸ்டியரிங்கை பிடித்து, பிரேக்கில் கால் வைத்து அழுத்தியிருக்கிறார்.
இந்த பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு தக்க சமயத்தில் 66 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.