செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் திங்களில் வந்திடுவாய் திசைக்காட்டும் தினசரியே | கோ.பூமணி

திங்களில் வந்திடுவாய் திசைக்காட்டும் தினசரியே | கோ.பூமணி

1 minutes read

புலரும் பொழுதிலே பூவையர் விழித்திங்கே
பூக்கோளம் இடுகின்றார் பூவிழி வாசலிலே
மலரும் செம்பருத்தி மகிழ்விக்கும் வர்ணத்தில்
வான்வெளியும் சிவந்திடவே வான்பரப்பைக் கடக்கின்றான்
வளரும் தேசத்தில் வசந்தம் நிறைந்திடவே
வன்முறை தவிர்த்திடவே வந்துதவ வேண்டுமே

சிலரின் செய்கையால் சீர்க்கெட்டு போகின்ற
சிறந்த தேசத்தின் சிறப்பைக் காத்திடவே
நினைவகத்தில் நிறைந்துள்ள நிறைவேறா ஆசைகளை
நிறைவேற்றித் தந்திடுவாய் நிறப்பிரிகை நாயகனே

அனைத்துலகும் இன்புறவே அன்பாலே பயனுறவே
உனைத்தானே கேட்கிறோம் ஊர்க்காவல் சேவகனே
மனையெல்லாம் மகிழ்ந்திடவே
மனைமாட்சி சிறந்திடவே மனசாட்சி செய்யட்டும்
மகத்தான அரசாட்சியே இறையாட்சி செய்திடவே
இமயத்தில் வீற்றிருக்கும் ஈசனும் முயல்கின்றான் இரவியின் துணையோடு

இலைமறை காயாக இரவியும் சொல்கின்றான்
இறையாண்மை காத்திடுங்கள் இதயங்கள் இதமாகும்
தலைமுறை தழைத்தோங்கும் தன்னலம் தேடாது
தரணியெலாம் பயனுறவே தமிழாக நிலைக்கையிலே
அலைக்கடல் போலெழுந்து அயராது முயற்சித்து
அடியெடுத்து வைத்திடவே அகிலத்தை வென்றிடலாம்
மலைப்பான மனக்கடலை மகிழ்வோடு நீந்திடவே
மரணத்தை வென்றிடலாம் மானுடத்தில் உயர்ந்திடலாம்

சூதில்லா சூரியன் சுழன்றோடும் வையத்தில் சுழலாமல்
நின்றிங்கு செங்கதிரைத் தந்திடவே
தோதில்லா கானகமும் தொடுவான வான்வெளியும்
திரைக்கடல் யாவையுமே தினகரன் நிறைகின்றான்
ஆதியாக திகழ்கின்ற அனலியான அருணனும்
அன்றாடம் தோன்றியே ஆண்டவனாய்த் தெரிகின்றான்

வேதியியல் போலவே வெவ்வேறு சாதியங்கள்
ஊரெங்கும் நிறைந்திடவே ஊற்றெடுக்கும் வன்முறைகள்
இல்லாமல் ஆக்கிடவே இயற்கையைக் காத்திடவே
திங்களில் வந்திடுவாய் திசைக்காட்டும் தினசரியே .

-கோ.பூமணி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.