அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போவதைத் தடுக்கும் இடைக்கால நிதி மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதி பைடன் அதைச் சட்டமாக்கும்போது அரசாங்கம் இன்னும் 45 நாள்கள் செயல்படுவதற்கு நிதி கிடைக்கும்.
அமெரிக்காவின் செனட் சபை, ஜனநாயகக் கட்சி செனட்டர் மைக்கல் பெனட் எழுப்பிய சில கேள்விகளால் மசோதா வாக்கெடுப்பு சற்று தாமதமானது.
ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கு ஆதரவளிக்க இருகட்சியின் உறுதி இருந்தால்தான் வாக்களிப்பைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
அதற்கு நிதி ஒதுக்க மசோதாவில் திட்டம் இல்லை என்றபோதும் உக்ரேனுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மக்களவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. அதற்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர்.