1
கம்பத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவுக்கான “டீஸர்’ செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிழல் திரைப்பட சங்கத்தின் சார்பில், கம்பம் அமராவதி திரையரங்கில், உலக திரைப்பட விழா வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.