செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டுவிட்டரில் லைக், ரீபோஸ்ட், பதிலளிக்க கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்க் அறிவிப்பு!

டுவிட்டரில் லைக், ரீபோஸ்ட், பதிலளிக்க கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்க் அறிவிப்பு!

1 minutes read

எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) லைக் செய்யவும், ரீபோஸ்ட் செய்யவும், பதிலளிக்கவும் ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தை வாங்கிய எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

அதேநேரத்தில், ‛பாட்’கள் (bots) மற்றும் ஸ்பேமர்கள் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கூறி வருகிறார்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு பதிவை லைக் செய்வது, அதனை ரீபோஸ்ட் செய்வது, மற்றவர்களின் பதிவை மேற்க்கோள் காட்டி ரீபோஸ்ட் செய்வது, புக்மார்க் செய்வது ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு 1 டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ள எலான் மஸ்க், இந்த கட்டணம் நாட்டுக்கு நாடு வேறுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

சோதனை முயற்சியாக முதலில் பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இன்று (18) அமுலுக்கு வருவதாகவும், படிப்படியாக மற்ற நாடுகளில் அமலுக்கு வரும் எனவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான Fake கணக்குகளை அகற்றும் Meta

தற்போதுள்ள பயனர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. புதிதாக வரும் பயனர்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, பதிவுகளை ரீபோஸ்ட், பதில் அளிக்க முடியும் எனவும் தெரியவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.