Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஆயிரக்கணக்கான Fake கணக்குகளை அகற்றும் Meta

ஆயிரக்கணக்கான Fake கணக்குகளை அகற்றும் Meta

0 minutes read

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான Meta ஆயிரக்கணக்கான Fake கணக்குகளை அகற்றியுள்ளது.

அந்தக் கணக்குகள், சீனாவிலிருந்து பரவும் தேவையற்ற மின்னஞ்சல் நடவடிக்கைகளோடு தொடர்புள்ளவை.

“Spamouflage” என்னும் பெயரிலான நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 9,000 Fake கணக்குகளை முடக்கியுள்ளதாக Meta நிறுவன அறிக்கை குறிப்பிட்டது.

அண்மை நடவடிக்கையின் கீழ், சீனாவைப் பெருமைப்படுத்தியும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சிறுமைப்படுத்தியும் பதிவுகள் பரப்பப்படுகின்றன.

முடக்கப்பட்ட Fake கணக்குகளில் சில, சீனாவின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகிறது.

Fake கணக்குகளில் பல, சீனாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஒரு தொகுப்பாகச் செயல்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

அநேகமாக அவை ஒரே அலுவலகத்திலிருந்து சில குழுவினரால் அனுப்பப்படக்கூடுமென Meta நிர்வாகிகள் கூறினர்.

அந்தப் Fake கணக்குகளை இயக்குவோர் பெய்ச்சிங் நேரப்படி மதிய மற்றும் இரவு உணவு இடைவேளை எடுத்துக்கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More