செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலையில் ஆணின் சடலம் மீட்பு!

திருமலையில் ஆணின் சடலம் மீட்பு!

0 minutes read

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (வயது 35)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தினர் எனவும், மற்றைய இருவரும் வீடுகளுக்குச் சென்றனர் எனவும், ஆனால் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார் எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று சடலத்தைப் பார்வையிட்டார்.

சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பொலிஸாரை நீதிவான் பணித்தார்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈச்சிலம்பற்று பொலிஸார், உயிரிழந்த நபருடன் மது அருந்திய இருவரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.