செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு | சீனா70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு | சீனா

70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு | சீனா70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு | சீனா

1 minutes read

சீன மக்களுக்கு எதிரான ஜப்பான் ஆக்ரமிப்பு மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற 70-வது தினம் கொண்டாடப்பட்டது.

இந்த 70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இந்த அணிவகுப்பில் 12,000 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். தியனன்மேன் சதுக்கத்தில் நடந்த இந்த அணிவகுப்பைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்திருந்தனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், தென்கொரிய அதிபர் ஆகியோர் இதில் பங்கேற்று பேரணியைப் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் பேரழிவை உருவாக்கும் அதிநவீன விமானம் தாக்கும் ஏவுகணைகள் பங்கேற்றன. கண்டம்தாண்டும் ஏவுகணைகள், டாங்கிகள், கவச வாகனங்களும் இந்தப் பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டன.

முக்கியமாக, மேம்படுத்தப்பட்ட டி.எப். -21டி (DF-21D) மற்றும் டி.எப்.-26 (DF-26) ஏவுகனைகள் இந்த பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் டி.எப். -21டி ஏவுகனை சுமார் 900 கடல் மைல்கள் தாண்டி சென்று விமானம் தாங்கிய போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது.

அதேபோல்  டி.எப்.-26 (DF-26) ஏவுகனை அணு ஆயுதங்களை தாங்கி 1800 மற்றும் 2500 மைல்கள் சென்று தாக்கும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி முக்கிமான அமெரிக்க ஊடகங்கள் கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.