செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது அடுத்த ஆண்டு முடிவு | கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலிதுணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது அடுத்த ஆண்டு முடிவு | கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி

துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது அடுத்த ஆண்டு முடிவு | கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலிதுணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது அடுத்த ஆண்டு முடிவு | கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி

1 minutes read

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப் போவதாக தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி புதன்கிழமை கூறினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் சிறந்த நிர்வாகத் திறன் உள்ளவர் என்று நாடு முழுவதும் பரவலான பாராட்டைப் பெற்றவர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவரிடம், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் போட்டி குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதிபர் வேட்பாளர் போட்டியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், ஆளுநர் பொறுப்பில் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். குடியரசுக் கட்சி சார்பில் 16 மிகச் சிறந்த மனிதர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். இறுதியில் இவர்களில் ஒருவர் அதிபர் வேட்பாளராகும்போது, மீதியுள்ள 15 பேரும் துணை அதிபர் பதவிக்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர் ஆகிறார்.
அதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் கூட, துணை அதிபர் பதவிக்கு என் பெயர் பரிசீலிக்கப்படுமானால், அதைப் பற்றி அதிபர் பதவி வேட்பாளருடன் ஆலோசனை நடத்துவேன். இப்போதைக்கு தெற்கு கரோலினா மாகாண மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எனது முழு கவனத்தைச் செலுத்துவேன்.

இன்றைய தினத்தைவிட நாளையை தினம் சிறப்பாக இருக்கச் செய்வேன் என்பது நான் அளித்த வாக்குறுதி. வேறு எந்தப் பதவி குறித்தும் எனக்கு ஆர்வம் இல்லை என்று நிக்கி ஹேலி கூறினார்.
தலைநகர் வாஷிங்டனில் தேசிய செய்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் நிக்கி ஹேலி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.