செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவீரர்களை நினைவேந்தப் பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்!

மாவீரர்களை நினைவேந்தப் பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்!

0 minutes read
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை – வீரமறவர்களை – மாவீரர் தினமான நாளை (27) நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. நாளை மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தின நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நாளை உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளன.

மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த ஒரு வாரமாக மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.