குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட 20 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்திய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நிர்வாகத்தினருக்கு நிவாரண பணியை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு உள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதேவேளை, தெற்கு குஜராத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.