டென்மார்க்கிலிருந்து சாலை வழியாக ஸ்வீடன் எல்லையை நோக்கி அகதிகள் கால்நடையாக செல்லத் தொடங்கியதையடுத்து, எல்லைப் பகுதி நெடுஞ்சாலையை டென்மார்க் போலீசார் மூடினர்.
டென்மார்க்கின் ராட்பி நகரில் கடல் வழியாக சுமார் 300 அகதிகள் வந்தனர். அவர்களில் பலர் சாலை வழியாக ஸ்வீடன் எல்லையை நோக்கி நடக்கத் தொடங்கினர். இது மிகவும் அபாயகரமான செயல் என்று பெண்கள் உட்பட பலரை போலீசார் எச்சரித்தனர்.
இந்த நிலையில், ஸ்வீடன் செல்லும் நெடுஞ்சாலையை போலீஸார் இழுத்து மூடியதுடன், டென்மார்க் அகதிகளாக பலரை பதிவு செய்தனர். எனினும், டென்மார்க்கிலேயே தங்க வைக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் பல அகதிகள் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய மறுத்ததால் போலீசாருக்கும், அகதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஜெர்மனியிலிருந்து டென்மார்க் வரும் ரெயில் சேவைகளை தக்க நோட்டீஸ் அளிக்கும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.