செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதான சாட்சி சமூகமளிக்காததால் அடையாள அணிவகுப்பு 8ஆம் திகதிக்கு மாற்றம்!

பிரதான சாட்சி சமூகமளிக்காததால் அடையாள அணிவகுப்பு 8ஆம் திகதிக்கு மாற்றம்!

0 minutes read

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் இன்று 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் அடையாள அணிவகுப்புக்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்துக்குச் சமூகமளித்திருந்தனர்.

எனினும், பிரதான சாட்சியான அலெக்ஸுடன் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காத காரணத்தால் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அத்தோடு தொடர் மரண விசாரணை நாளை நீதிமன்றில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸ் படுகொலை வழக்கில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.