செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; இருவர் பலி

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; இருவர் பலி

0 minutes read

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாநிலத்தில் தற்போது பரவும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.