அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானை ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் தலைவர் லாஸினா ùஸர்போ வெள்ளிக்கிழமை கூறியதாவது:
உலக வல்லரசு நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொண்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்திலும் அந்த நாடு கையெழுத்திட்டால்தான் அந்த நாட்டின் மீதான ஐயம் முற்றிலும் விலகும்.
அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்னரே ஈரான் அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
அப்போதுதான், ஈரானுக்கு அணு ஆயுத பலம் பெறும் எண்ணம் இல்லை என்பதையும், அணுகுண்டுகளுக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த 2013-ஆம் ஆண்டு விதித்திருந்த மதத் தடை (ஃபத்வா) உண்மை என்பதையும் விமர்சகர்களிடம் நிரூபித்திருக்க முடியும்.
இப்போதாவது அந்தத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான், 15 ஆண்டுகள் கழித்து அணுசக்தி ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என்ற நம்பிக்கை வல்லசு நாடுகளுக்கு ஏற்படும் என்றார் அவர்.