செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனைஅகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை

அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனைஅகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை

1 minutes read

அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய யூனியன் தலைமையகத்தில் அந்நாடுகளைச் சேர்ந்த உள்துறை அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரியா வழியாக அகதிகள் நுழைய முற்படுவதைத் தடுக்கும் வகையில் முந்தைய கடுமையான கட்டுப்பாடுகளை ஜெர்மனி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
மத்தியதரைக் கடலைக் கடந்து, தினசரி ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். பொதுவாக அகதிகளுக்குப் புகலிடம் அளிக்கப் பல்வேறு நாடுகளின் அரசுகளும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்தபோதிலும், எத்தனை அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.6 லட்சம் அகதிகளைப் பல்வேறு நாடுகளிடையே பங்கீடு செய்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உள்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
சிரியா, இராக் ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து அந்த நாடுகளைவிட்டு வெளியேறுவோரை ஏற்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே ஒப்புக் கொண்டன.
மே மாதம் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தலா 40 ஆயிரம் அகதிகளை ஏற்க வேண்டும்.
ஆனால் கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவுக்குள் அகதிகள் நுழைவு மிக அதிகமாக உள்ளதால் புதிய நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 அகதிகள் நுழைவு அதிகரிப்பு: ஜெர்மனியில் ரயில் சேவைகள் நிறுத்தம்
பெர்லின், செப். 14: ஜெர்மனிக்குள் அகதிகள் நுழைவது அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையேயான ரயில் சேவைகளை திங்கள்கிழமை ஜெர்மனி நிறுத்தியது.
காலை முதல் மாலை வரை ஜெர்மனி – ஆஸ்திரியா இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
முன்னதாக, ஜெர்மனிக்குச் செல்லும் ரயில்கள் 12 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரியா அறிவித்திருந்தது.
அகதிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்டு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளும் எல்லைப் பகுதிகள் கண்காணிப்பை பழையபடி கடுமையாக்கியுள்ளன.
ஆஸ்திரியா எல்லைப் பகுதிகளில் தாற்காலிக முகாம்கள் அமைந்துள்ள பல இடங்களில் உள்ளூர் மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.