`அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பாரதிராஜாவால் அறிமுகமாகி தென்னக திரை உலகை கலக்கியவர் ராதா. 1980 காலகட்டத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு உள்பட அனைத்து முன்னணி நடிகர் களுடனும் நடித்தார். முதல் மரியாதை படத்தில் சிவாஜியுடன் நடித்து முத்திரை பதித்தார். அவருக்குப்பிறகு 2 மகள்களையும் திரை உலகில் அறிமுகம் செய்து வைத்தார்.
மூத்த மகள் கார்த்திகா `கோ’ படத்தின் மூலம் நாயகி ஆனார். அந்த படம் பேசப்பட்டது. அதன்பிறகு `அன்னக்கொடி’, `புறம்போக்கு என்கிற பொது உடமை’ படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
பின்னர் `வாடீல்’ படத்தில் நடித்தார். அதுவும் குறிப்பிட்ட நாளில் திரைக்கு வரவில்லை. தற்போது கார்த்திகாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை.
ராதாவின் 2-வது மகள் துளசி மணிரத்தினம் படத்தில் அறிமுகமானார். அது எதிர்பார்த்தபடி வெற்றியை பெறவில்லை. அடுத்து `யான்’ படமும் பெயர் வாங்கி கொடுக்க வில்லை.இப்போதும் குறிப்பிட்டு சொல்லும்படி படம் அமைய வில்லை.
`ஓகோ’ என்று கொடிகட்டி பறந்த ராதா தன்னுடைய மகள்களுக்கு திரைஉலகில் நிலையான இடத்தை அடைத்துக் கொடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளார். என்றாலும், 2 மகள்களுக்கும் அடுத்து அமையும் படங்களாவது பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ராதா அக்கறையுடன் இருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இனியாவது 2 மகள்களும் வெற்றிக்கொடி நாட்டுவார்களா என்பதை ராதா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.