கிரீசில் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலேக்சிஸ் சிப்ரஸ் தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கித்தவித்து வரும் நிலையில், முன்னாள் நிதியமைச்சர் யுக்லிட் சகலோடோசா மீண்டும் நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிரீசின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த சகலோடோஸ் கடும் சவால்களை எதிர்நோக்கவிருக்கிறார். பிரதமர் சிப்ரஸ் உறுதியளித்திருக்கும் சவால்மிக்க பொருளியல் சீர்திருத்தங்களைத் இவரே செயல்படுத்தவேண்டும். அப்போதுதான், கிரீசுக்குக் கடன் கொடுத்த அனைத்துலக கூட்டிணைப்பு, அடுத்த ஐந்தாண்டில், மூன்றாவது கடன் மீட்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கும்.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தைப் போன்றே புதிய அரசாங்கமும் உள்ளதென்றும், உறுப்பினர்களில் புதிய மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.